Enable Javscript for better performance
8-வது ஊதியக் குழு அமைக்க அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    8-வது ஊதியக்குழு அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு ஊழியர் சங்க வட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
    பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 4-வது வட்ட மாநாடு, வட்டத் தலைவர் அறிவழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார் மாநாட்டை தொடக்கி வைத்தார்.   இதில், 1.7.2016 ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய அகவிலைப் படியை ரொக்கமாக வழங்க வேண்டும். 1.1.2016 முதல் இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும். மத்திய அரசு 8-வது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
      இந்த மாநாட்டில், சங்க செயலர் தியாகராஜன், துணைத் தலைவர்கள் சிவக்குமார், முத்துசாமி, தனலட்சுமி, இணைச் செயலர்கள் சரவணன், வடிவேலு, தேவதாஸ், பொருளாளர் லெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai