Enable Javscript for better performance
கல்லூரி மாணவி தூக்கிட்டு சாவு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் மகள் ஆர்த்தி (19). இவர், திருச்சியில் உள்ள ஈ.வெ.ரா கல்லூரியில் பி.எஸ்.ஸி 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். ஆர்த்தியின் பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால், சித்தப்பா வீட்டில் ஆர்த்தியும், பிரம்மதேசம் கிராமத்தில் உள்ள தாத்தா பொன்னுசாமி வீட்டில் அவரது தங்கை சத்யாவும் தங்கி படித்து வந்தனர்.
    இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை செங்குணம் கிராமத்துக்கு வந்த ஆர்த்தி, அவரது பெற்றோர் உயிரிழந்தது குறித்தும், தங்கையின் நிலை குறித்தும் வேதனையடைந்தாராம். இதனால் மனமுடைந்த ஆர்த்தி, அவரது சித்தப்பா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    தகவலறிந்த மருவத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவியின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சித்தி மல்லிகா அளித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai