Enable Javscript for better performance
குறுவட்ட போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்களுக்கிடையே மாணவிகளுக்கான குறுவட்ட போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
    மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளை மாவட்டக் கல்வி அலுவலர் இல. வெங்கடாசலபதி தொடக்கி வைத்தார். இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்ட பிரிவுகளின் கீழ் 100 மீ, 200 மீ, 400 மீ, 1,500 மீ ஓட்டம், தடகளப் போட்டிகள், உயரம் தாண்டுதல் என 43 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன..
    அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 63 பள்ளிகளில் பயிலும் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். வெற்றிப் பெற்ற 314 மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராம. சுப்பிரமணியராஜா வழங்கினார்.
    மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai