Enable Javscript for better performance
சேவை குறைபாடு விவசாயிக்கு ரூ.92 ஆயிரம் இழப்பீடு வழங்க வேளாண் துறைக்கு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    சேவை குறைபாடு விவசாயிக்கு ரூ.92 ஆயிரம் இழப்பீடு வழங்க வேளாண் துறைக்கு உத்தரவு

    By DIN  |   Published on : 08th October 2016 02:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள வாழைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரா. நடராஜன் (53). விவசாயி. இவர், 2011-ல் தா.பழூரில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விதை நெல் வாங்கி தனக்கு சொந்தமான நிலத்தில் சாகுபடி செய்தாராம்.
    சாகுபடி செய்யப்படும் விதை நெல் அனைத்தையும், வேளாண்மைத் துறை அலுவலகத்திலேயே கொள்முதல் செய்து கொள்வதாக வேளாண் அலுவலர்கள் கூறியதால் விதை நெல்லுக்கான தொகையை அங்கு செலுத்தி நடராஜன் பதிவு செய்துள்ளார்.
    ஆனால், நடராஜன் சாகுபடி செய்த விதை நெல் தரமில்லை எனக்கூறி, அவற்றை கொள்முதல் செய்ய வேளாண்மைத் துறையினர் காலம் தாமதம் செய்தனராம். பின்னர், காலதாமதமாக கொள்முதல் செய்யப்பட்ட விதை நெல்லுக்கான தொகையை உரிய காலத்தில் அளிக்க தவறியதாக தெரிகிறது.
    வேளாண்மைத் துறையினரின் சேவைக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு மன உளைச்சல் அடைந்த நடராஜன் தா. பழூர் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆகியோர் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
    விசாரணையில் நிறைவில், நடராஜனிடம் இருந்து விதைநெல்லை கொள்முதல் செய்த வகையில் ரூ. 67,365 மற்றும் பொருள் இழப்பீட்டிற்காக ரூ. 20 ஆயிரம், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 92,365 இழப்பீட்டுத் தொகையை 2 மாதங்களுக்குள் அளிக்க வேண்டும் என, தா.பழூர் வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai