Enable Javscript for better performance
போலி கால்நடை மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    போலி கால்நடை மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 02:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் போலி கால்நடை மருத்துவர்கள் இருப்பது கண்டறியப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.
    இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏழை, எளிய மக்கள் பராமரித்து வரும் கால்நடைகளுக்கு உரிய மருத்துவம் இலவசமாக கிடைக்கவும், இந்த மருத்துவ பணிகள் கால்நடை மருத்துவ படிப்பை முறையாக படித்து, கால்நடை மருத்துவர்கள் மூலம் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து வருவது தமிழ்நாடு கால்நடை மருத்துவ பேரவை பணிகளில் ஒன்றாகும். கால்நடை மருத்துவ பேரவை என்றழைக்கப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவுபெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமே, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்டவர்கள். இதை மீறி கால்நடை மருத்துவம் பயிலாதவர்கள் கால்நடை மருத்துவ பணிகள் மேற்கொள்கிறார்களா, தனது பெயரில் கால்நடை மருத்துவம் படித்ததாக பி.வி.எஸ்.சி பட்டபடிப்பை சேர்த்து கொள்கிறார்களா என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பேரவை கண்காணித்து வருகிறது. போலியானவர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடுகளுக்கும், இழப்பீடுகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது.
    மாவட்ட அளவில் ஆவின் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மேம்பாடு முகமை மூலம், எஸ்.எஸ்.எல்.சி படிப்பு முடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, செயற்கை முறை கருவூட்டல் பணியை மட்டும் மேற்கொள்ளும் வகையில் அவர்களுக்கு 3 மாத பயிற்சி அளித்து வருகிறார்கள். அவர்கள் கருவூட்டல் பணி மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பயிற்சி பெற்றவர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், முதல் உதவி செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடுவது கண்டறிப்பட்டால், முதன் முறையாக கண்டறியும் போது ரூ. 1,000 அபராதமும், 2-வது முறையாக கண்டறியும் போது ரூ. 5 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து வழங்கப்படும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai