Enable Javscript for better performance
அக். 18-ல் சின்ன வெங்காயம் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    அக். 18-ல் சின்ன வெங்காயம் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி

    By DIN  |   Published on : 15th October 2016 01:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    onion

     

    பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி குறித்த தொழில்நுட்ப இலவச பயிற்சி அக். 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இதுகுறித்து, அந்த மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான (பொ) ஜெ. கதிவரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    இப் பயிற்சியில் சின்ன வெங்காய குமிழங்களை நேர்த்தி செய்தல், ஒருங்கிணைந்த உர மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை, விதை மூலம் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தல், வறட்சி மேலாண்மை உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் செயல்விளக்கம் மற்றும் காணொலிக் காட்சிகள் மூலம் விளக்கப்பட உள்ளது.  

    இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தை 7200044321 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.  

    பயிற்சியானது வரும் 18 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai