Enable Javscript for better performance
ஓடும் லாரியில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர், கிளீனர் உயிர்தப்பினர்- Dinamani

சுடச்சுட

    

    ஓடும் லாரியில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர், கிளீனர் உயிர்தப்பினர்

    By DIN  |   Published on : 15th October 2016 06:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே வெள்ளிக்கிழமை சுண்ணாம்புக்கல் கிளிஞ்சல்களை ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென தீப்பற்றியதைத் தொடர்ந்து லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளீனர் உடனடியாக லாரியில் இருந்து குதித்து உயிர்தப்பினர்.
    அரியலூரிலிருந்து பீங்கான் பொருள்கள் தயாரிக்க தேவையான மூலப்பொருளான சுண்ணாம்புக்கல் கிளிஞ்சல்களை ஏற்றிக்கொண்டு, பெங்களூரூ நோக்கி லாரி ஒன்று வெள்ளிக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தது.
    லாரியை திருவண்ணாமலை மாவட்டம், மலையனூர் அருகேயுள்ள செக்கடி பகுதியைச் சேர்ந்த குமார் (32) ஓட்டிச் சென்றார்.
    இவருடன் உதவியாளர் திருவண்ணாமலை மாவட்டம், தாணிப்பாடி கிராமத்தை சேர்ந்த ஜெய்கண்ணு (29) என்பவரும் சென்றார்.
    திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே சென்றபோது திடீரென லாரியின் பின்புறம் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
    இதுகுறித்து அவ்வழியே சென்ற வாகன ஓட்டுநர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர் குமார், உதவியாளர் ஜெய்கண்ணு ஆகியோர் லாரியிலிருந்து குதித்து உயிர்தப்பினர்.
    இதையடுத்து லாரி முழுவதும் தீ பரவியது.
    தகவலறிந்து வந்த பெரம்பலூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai