Enable Javscript for better performance
பாடாலூர் அருகே  அரசுப் பேருந்து கவிழ்ந்து 11 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    பாடாலூர் அருகே  அரசுப் பேருந்து கவிழ்ந்து 11 பேர் காயம்

    By DIN  |   Published on : 15th October 2016 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே, வெள்ளிக்கிழமை சாலை மையத் தடுப்பு சுவரில் அரசு விரைவுப் பேருந்து மோதி கவிழ்ந்ததில் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.  
    செங்கோட்டையிலிருந்து சென்னை நோக்கி வெள்ளிக்கிழமை அரசு விரைவுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகேயுள்ள இரூரில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.
    இதில், பேருந்தில் பயணம் செய்த 20 பேரில் விழுப்புரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் குப்பன் (36), ராஜபாளையத்தை சேர்ந்த அமிர்தராஜ் மகன் வளவன் (43), கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சேதுராமன் மகன் ஸ்ரீதரன் (52), குப்பன் மகன் கோவிந்தசாமி (35), அழகர்கோவிலை சேர்ந்த அரவாளி மகன் கவுதம் (30) உள்பட 11 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்த பாடாலூர் போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
    மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநர் திருநெல்வேலி மாவட்டம், மேட்டூரை சேர்ந்த ராமரத்தினம் மகன் ராஜாவைத்தியலிங்கத்தை (30) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai