Enable Javscript for better performance
பெரம்பலூரில் கரும்பு ஆராய்ச்சி, அபிவிருத்தியாளர்கள் கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில் கரும்பு ஆராய்ச்சி, அபிவிருத்தியாளர்கள் கருத்தரங்கு

    By DIN  |   Published on : 15th October 2016 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மத்திய கரும்பு இனப்பெருக்கக் கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில 47-வது கரும்பு ஆராய்ச்சி, அபிவிருத்தியாளர்கள் கருத்தரங்கு பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கோவை கரும்பு இனப்பெருக்கக் கழக இயக்குநர் டாக்டர் பக்க்ஷிராம் தலைமை வகித்தார்.  
    கருத்தரங்கத்துக்கு முன்னிலை வகித்து, தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர் செந்தில்ராஜன், கரும்பில் குறைந்த வயதுடைய ரகங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும், கரும்பு சாகுபடியில் சிறு இயந்திரங்களை அறிமுகப்படுத்தி, கூலி ஆள்கள் பற்றாக்குறையை நீக்கவும், சாகுபடி செலவை குறைப்பதற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
    சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாண்டிச்சேரி மாநில வேளாண் இயக்குநரும், சர்க்கரைத் துறை ஆணையருமான டாக்டர் ராமமூர்த்தி பேசுகையில், பல்வேறு காரணங்களால், கரும்பு சாகுபடியை கைவிட்டு வரும் விவசாயிகளின் மனப்பாங்கை மாற்றும் வகையில், கரும்பு ஆராய்ச்சியாளர்களும், அபிவிருத்தியாளர்களும் கவனம் செலுத்தி முன்னேற்றம் காண வேண்டும் என்றார் அவர்.   கருத்தரங்கில் கரும்பு வயல்களில் காட்டுப்பன்றி மற்றும் எலிகள் மேலாண்மை, கரும்பு விவசாயத்தில் இயந்திரமயமாக்கம், புதிய மேம்படுத்தப்பட்ட கரும்பு ரகங்கள், கரும்பில் விதை நாற்றங்கால் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு அரிசி ஆராய்ச்சி இன்ஸ்ட்டியூட் நிர்வாகி ரவி, பெரம்பலூர் வேளாண் துறை இணை இயக்குநர் சந்திரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 45 சர்க்கரை ஆலைகளின் கரும்புத்துறை அலுவலர்கள், கரும்பு விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலை செயல் இயக்குநர் சின்னப்பன் வரவேற்றார். ஆலையின் பொது மேலாளர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai