Enable Javscript for better performance
மானாவாரி பருத்தியில் வேரழுகல், வாடல் நோயைக் கட்டுப்படுத்த யோசனை- Dinamani

சுடச்சுட

    

    மானாவாரி பருத்தியில் வேரழுகல், வாடல் நோயைக் கட்டுப்படுத்த யோசனை

    By DIN  |   Published on : 15th October 2016 06:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மானாவாரி சாகுபடியில் வேரழுகல் மற்றும் வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசனை தெரிவித்துள்ளார் வேளாண்மை இணை இயக்குநர் பி. சந்திரன்.
    இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் மானாவாரி பருத்தியானது 20,770 ஹெக்டேர் பரப்பளவில் பயரிடப்பட்டு, தற்போது 60 முதல் 70 நாள் பயிராக உள்ளது. தற்போது வறட்சி அதைத்தொடர்ந்து மழை என்ற நிலையில் பருத்தி பயிரை வேரழுகல் நோய் மற்றும் வாடல் நோய் தாக்க வாய்ப்பு உள்ளது.  
    வாடல் நோயானது, பயிரின் அனைத்து நிலையிலும் தாக்கும் தன்மை கொண்டது. பொட்டாஷ் சத்து குறைவினாலும், இந்நோய் வரும். வேரழுகல் நோயானது இளம் மற்றும் வளர்ந்த செடியில் வரும். செடியை பிடுங்கினால் கையோடு வந்துவிடும். இந்நோய்களில் இருந்து பயிரை காக்க மழைநீர் தேங்காத வகையில், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.  
    இந்நோய்களிலிருந்து செடிகளை காக்க 1 லிட்டர் தண்ணீரில் பினோமில் 1.5 கிராம் அல்லது, காப்பர் ஆக்சி குளோரைடு 3 கிராம் அல்லது, காப்பர் ஹைட்ராக்சைடு 2 கிராம் அல்லது, ரிடோமில் 1 கிராம் அல்லது, நேட்டிவ்வோ 0.5 கிராம் அல்லது, டிரைகோடெர்மா விரிடி 10 கிராம் உள்ளிட்ட பூஞ்சான கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, அதை நன்கு கரைத்து பாதிக்கப்பட்ட செடி மற்றும் சுற்றியுள்ள செடிகளின் வேர்ப்பகுதி நனையுமாறு ஊற்ற வேண்டும்.
    15 நாள்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை ஊற்ற வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்தால், பருத்தியில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai