Enable Javscript for better performance
ராஜ்யபுரஷ்கார் விருது: சாரணியர்களுக்கு தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கம் சார்பில், ராஜ்யபுரஷ்கார் விருதுக்கான தேர்வு முகாம் பெரம்பலூர் சாரண, சாரணியர் கூட்ட அரங்கில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    முதன்மைத் தேர்வாளர்களாக சாரணர் பிரிவுக்கு உடையார்பாளையம் கல்வி மாவட்ட பயிற்சி ஆணையர் வி. சுவாமிநாதன், சாரணியர் பிரிவுக்கு டு. ஜெயமேரி ஆகியோர் மாநிலத் தலைமையகத்தால் நியமிக்கப்பட்டு சாரண, சாரணியர்களை சோதனை செய்தனர்.
    சாரணச் சீருடை, சாரண உறுதிமொழி, சட்டம், குறிக்கோள், முதலுதவி, கயிற்றுக்கலை, பாசறை அமைக்கும் திறன், மதிப்பீடு, நிலப்படம் ஆகிய தலைப்புகளில் வாய்மொழித் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு ஆகிய முறைகளில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
    சாரண ஆசிரியர்கள், குணாளன், பாபி ராபர்ட், தனபால், தெய்வீகராஜன், சாரணிய ஆசிரியைகள் தனலட்சுமி, சரோஜா, சாந்தி, பிரேமலதா, மல்லிகாராணி, மோனிக்கா குகணேஷ்வரி ஆகியோர் உதவி தேர்வர்களாகப் பணிபுரிந்தனர்.
    முகாமை, பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலரும், மாவட்டச் சாரண ஆணையருமான இல. வெங்கடாஜலபதி பார்வையிட்டு சாரண, சாரணியரை வாழ்த்தினார். இத்தேர்வில், வெற்றி பெறுவோருக்கு மாநில அளவில் ஆளுநரால் விருதுக்கான சான்றிதழ் வழங்கப்படும்.
    முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 பள்ளிகளிலிருந்து 78 சாரணர்களும், 54 சாரணியர்களும் என மொத்தம் 132 பேர் பங்கேற்றனர்.
    ஏற்பாடுகளை, மாவட்டச் செயலர் க. செல்வராசு தலைமையில், சாரண, சாரணிய ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai