Enable Javscript for better performance
வளாக நேர்காணல்: 81 மாணவர்கள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நேர்காணலில் 81 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சீனிவாசன் இருபாலர் கல்லூரியின் மனிதவள மேம்பாட்டுத் துறைகள் சார்பில் வளாக நேர்காணல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    சென்னை ஹிந்துஜா குளோபல் சொலியுசன் தனியார் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர் ஜார்ஜ் வேளாங்கண்ணி முன்னிலையில் நடைபெற்ற வளாக நேர்காணலில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.  
    இதில், குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் 81 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai