Enable Javscript for better performance
ஏஐடியுசி-யின் விளம்பர பதாகை கிழிப்பு: அதிமுக சங்க நிர்வாகி மீது புகார்- Dinamani

சுடச்சுட

    

    ஏஐடியுசி-யின் விளம்பர பதாகை கிழிப்பு: அதிமுக சங்க நிர்வாகி மீது புகார்

    By DIN  |   Published on : 17th October 2016 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் அரசு போக்குவரத்துக் கழக கிளை அலுவலகம் எதிரே ஏஐடியூசி சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை கிழித்ததாக, அதிமுக தொழிற்சங்க நிர்வாகி மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
    பெரம்பலூர் அரசு போக்குவரத்து கிளை அலுவலக பணிமனையில், ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் இதர சங்க நிர்வாகிகளை பணி செய்ய விடாமல் ஊதியம் பெறுவதாகக் கூறியும், இச்செயலை கண்டித்தும் அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியூசி சங்கம் சார்பில் பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 18) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
    மேலும், இதுதொடர்பான விளம்பர பதாகையை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை எதிரேயுள்ள ஏஐடியூசி சங்கத்துக்கு சொந்தமான விளம்பர பதாகையில், அச்சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஒட்டப்பட்டது.  இந்நிலையில், இந்த பதாகையை அதிமுக தொழிற்சங்க பெரம்பலூர் கிளை துணைத்தலைவர் பி. இளவரசன் ஞாயிற்றுக்கிழமை மாலை கிழித்தாராம்.  இதையறிந்த, ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தின் பெரம்பலூர் கிளைத் தலைவர் கே. ஜெயராமன், பதாகையை கிழித்ததற்கு விளக்கம் கேட்டதற்கு,
    அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாம். இதனால், இரு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று, இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து, ஏ.ஐ.டி.யூ.சி கிளைத் தலைவர் கே. ஜெயராமன் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai