பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை, ரூ. 1.60 லட்சம் திருட்டு

பெரம்பலூரில் புதன்கிழமை பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
Published on

பெரம்பலூரில் புதன்கிழமை பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
பெரம்பலூர் நான்கு சாலை செல்வா நகரைச் சேர்ந்தவர் சேகர் (47). இவர், அதே பகுதியில் டைல்ஸ் விற்பனை கடை வைத்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் கடைக்கு சென்றுவிட்டாராம். பின்னர், மதிய உணவிற்காக வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 23 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருள்கள் ரூ. 1.60 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 8 லட்சம் எனக் கூறப்படுகிறது
தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். கைரேகை நிபுணர்கள், கை ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com