மனுநீதி நிறைவு நாள் முகாமில்  263 பயனாளிகளுக்கு ரூ. 3.25 கோடியில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில்
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் 263 பயனாளிகளுக்கு ரூ. 3.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளித்த மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா பேசியது:
 கிராமங்கள்தோறும் நடைபெறும் இதுபோன்ற சிறப்பு மனுநீதி முகாம்கள் மூலமாக, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை தெரிந்துகொள்வதுடன், அதன்மூலம் பயனடைய தேவையான தகுதிகள் குறித்து தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும். இதில் கிராம பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான அரசின் திட்டங்கள் குறித்து நேரடியாக கேட்டறிந்து கொள்வதுடன், அத்திட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கும் பேருதவியாக இருக்கும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற முகாம்களில் கலந்துகொண்டு, அரசின் திட்டங்களை தெரிந்துகொள்வதுடன், அத்திட்டங்களை  பயன்படுத்திக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.  
மேலும், அனைவரும் சுகாதாரமான வாழ்வு வாழ்வதற்கு அனைவரின் இல்லங்களிலும் தனிநபர் இல்ல கழிப்பறைகளை அமைக்க வேண்டும் என்றார்.  
முகாமையொட்டி பொதுமக்களிடமிருந்து 727 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 55 மனுக்களுக்கு உடனடி தீர்வும், 226 மனுக்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டது. 446 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.
முன்னதாக, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, புதுவாழ்வுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் 263 பயனாளிகளுக்கு ரூ. 3,25,55,964 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஆட்சியர் வே. சாந்தா.  இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாலன், மாவட்ட பிற்பபடுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாண்டியன், வட்டாட்சியர்கள் பாரதிவளவன், ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com