பெரம்பலூர் அரிமா சங்கம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள், ஸ்ரீ ஆனந்த் ஜூவல்லர்ஸ், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மே 21ஆம் தேதி நடைபெறுகிறது.
அரிமா சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில், சாசன தலைவர் மு. ராஜாராம் முன்னிலையில் நடைபெறும் முகாமை, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கண் புரை, சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கருவிழியில் புண் போன்ற குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிக்சை அளிக்க உள்ளனர். ஏற்பாடுகளை சங்க செயலர்கள் பாபு, மகாதேவன், பொருளாளர் முரளி மற்றும் அரிவையர் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.