மனுநீதி முகாமில்  ரூ. 3.43 கோடியில் நலத்திட்ட உதவிகள்

நன்னை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் 482 பயனாளிகளுக்கு ரூ. 3.43 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

நன்னை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் 482 பயனாளிகளுக்கு ரூ. 3.43 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டம், நன்னை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாமில் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினர் மா. சந்திரகாசி பேசியது:
தேர்தலின்போது அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் நிறைவேற்றிடும் வகையில், மக்களைத் தேடி அரசு நிர்வாகம் என்ற திட்டத்தின் அடிப்படையில் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்களும், ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து வருகின்றனர் என்றார் அவர்.
மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் பேசியது: கடுமையான வறட்சியின் காரணமாக விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. விவசாயிகளின் நலம் பேணும் அரசான தமிழக அரசு, பெரம்பலூர் மாவட்டத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ. 74 கோடி ஒதுக்கியுள்ளது. இத்தொகை முழுவதும் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி முடிவடைந்துள்ளது.
மேலும், வறட்சியை சமாளித்து குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் புதிய கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் பழைய கிணறுகளை தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளுக்காக வேப்பூர் ஒன்றியத்தில் ரூ. 3 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
அடிப்படை தேவைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் 18004254556 என்ற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணில் புகார்களை தெரிவிக்கும் பட்சத்தில், அனைத்து கோரிக்கைகளும் தீர்த்து வைக்கப்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசன அமைப்புகள் தமிழக அரசால் அமைத்து தரப்படுகின்றன. விவசாயிகள் அனைவரும் சொட்டுநீர் பாசன அமைப்புகளை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்றார்.
இந்த முகாமில் பெறப்பட்ட 944 கோரிக்கை மனுக்களில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டது. 31 மனுக்கள் நிராகரிப்பும், 898 மனுக்களுக்கு உரிய விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.  முகாமில், ஊரக வளர்ச்சித் துறை, தாட்கோ, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் 482 பயனாளிகளுக்கு ரூ. 3,43,29,901 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com