பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயின்ற 10 ஆம் வகுப்பு மாணவர்கள், சூப்பர்- 30 சிறப்பு பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்காக புதன்கிழமை நடைபெற்ற நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் 303 பேர் பங்கேற்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பு மருத்துவம்- 30, சிறப்பு பொறியியல்- 30 ஆகிய பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு சூப்பர்- 30 என்ற பெயரில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படு வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி, அதன்மூலம் சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் 425 மதிப்பெண்களும், பிற மாணவர்கள் 450 மதிப்பெண்களும் பெற்றவர்கள் நுழைவுத்தேர்வு எழுத தங்களது பெயரை, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மே 22 ஆம் தேதி முதல் பதிவு செய்தனர்.
அதன்படி, நிகழாண்டுக்கான சூப்பர்- 30 வகுப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான நுழைவுத்தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 303 பேர் பங்கேற்று நுழைவுத்தேர்வு எழுதினர். இத்தேர்வு மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழி தேவி உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் பர்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மீண்டும் வாய்ப்பு:
இத்தேர்வில் பங்கேற்காத மாணவ, மாணவிகளின் வசதிக்காக மே 26, 29-களில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்ட மாணவ, மாணவிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள சூப்பர்- 30 ஒருங்கிணைப்பாளரை அணுகி, தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.