ஜமாபந்திகளில் 152 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்திகளில் பெறப்பட்ட 322 மனுக்களில் 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது
Published on
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்திகளில் பெறப்பட்ட 322 மனுக்களில் 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறுகிறது. அதன்படி, ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் உள் வட்டத்திற்குள்பட்ட கொட்டரை, சாத்தனூர், சிறுகன்பூர் (கி- மே), வரகுபாடி, காரை (கி- மே), தெரணி, அயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் (கி- மே) ஆகிய வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி புதன்கிழமை நடைபெற்றது.
வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூர் உள் வட்டத்திற்குள்பட்ட பெரிய வடகரை, நூத்தப்பூர் (தெ- வ), பில்லாங்குளம், கை.களத்தூர் (கி- மே), கை.களத்தூர் (கி), காரியனூர், பசும்பலூர் (வ- தெ), பாண்டகப்பாடி, திருவாளந்துரை, அகரம் ஆகிய வருவாய் கிராமங்களிலும், பெரம்பலூர் வட்டம், குரும்பலூர் உள் வட்டத்திற்குள்பட்ட பொம்மனப்பாடி, வேலூர், எசனை, அலங்கிழி, கீழக்கரை, எளம்பலூர், செங்குணம், துறைமங்கலம், பெரம்பலூர் (தெ- வ) ஆகிய வருவாய் கிராமங்களிலும் நடைபெற்றது.
குன்னம் வட்டம், கீழப்புலியூர் உள் வட்டத்திற்குள்பட்ட நன்னை (கி- மே), பெருமத்தூர் (வ- தெ), சிறுமத்தூர், கீழப்புலியூர் (வ- தெ), எழுமூர் (மே), மழவராயநல்லூர், எழுமூர் (கி), ஆண்டிக்குரும்பலூர், அசூர், சித்தளி (கி- மே), பேரளி (தெ- வ), ஒதியம் ஆகிய வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நடைபெற்றது.
ஜமாபந்தியில் அனைத்து வட்டங்களிலும் பெறப்பட்ட 322 மனுக்களில் 152 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், 53 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 117 மனுக்கள் உரிய விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com