பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் புதன்கிழமை மாலை உயிரிழந்தார்.
வேப்பந்தட்டை அருகேயுள்ள பசும்பலூர் காட்டுகொட்டகைப் பகுதியைச் சேர்ந்தவர் சோலைமுத்து மகன் வீரபாண்டியன் (19), கூலித்தொழிலாளி. இவர், புதன்கிழமை மாலை வெள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் விவசாய நிலத்தில் உள்ள மின் மோட்டார் சுவிட்சை போட முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
தகவலறிந்த வி. களத்தூர் போலீஸார் அங்குசென்று அவரது சடலத்தை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து, காரியானூர் கிராம நிர்வாக அலுவலர் சந்திரபாவலரசன் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.