பெரம்பலூர் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை அளித்தார் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்பிரமணியராஜா.
மாவட்ட விளையாட்டரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் 35 பள்ளிகளை சேர்ந்த 150 மாணவர்களும், 70 மாணவிகளும் பங்கேற்றனர்.
இளநிலைப் பிரிவான மழலை வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள பிரிவில் மாணவியர் ஒற்றையர் போட்டியில் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி டி. நீரஜா முதலிடமும், பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ். விஜயலட்சுமி 2 ஆம் இடமும், புனித ஜோசப் பிரைமரி பள்ளி மாணவி ஜே. செல்விசெந்தமிழ் 3 ஆம் இடமும், மாணவர்களுக்கான போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவர் கே.டி. சைலேஷ் முதலிடமும், மரகதம் மெட்ரிக் பள்ளி மாணவர் எஸ். சூர்யா 2 ஆம் இடமும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் கே. கபில் 3 ஆம் இடமும் பெற்றனர்.
மாணவிகளுக்கான இரட்டையர் போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவிகள் என். மஹாலட்சுமி, ப்ரித்திகா முதலிடமும், புனித ஜோசப் நர்சரி பள்ளி மாணவிகள் தாரணி, திவ்யா 2 ஆம் இடமும், தர்சிகா, நிஷாந்தினி 3 ஆம் இடமும், மாணவர்களுக்கான போட்டியில் புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவர் சு. சந்தீப், யு. விதிஸ் முதலிடமும், தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கே.டி. சைலேஷ், எம். பிரதீப் 2 ஆம் இடமும், அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி மாணவர்கள் எஸ். சூர்யா, எஸ். வினோத்குமார் 3 ஆம் இடமும் பெற்றனர்.
முதுநிலைப் பிரிவான 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கான ஒற்றையர் போட்டியில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்பள்ளி மாணவி ஜெ. செளமியா முதலிடமும், கேந்திரிய வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவி எஸ். அனிஷா 2 ஆம் இடமும், சத்திரமனை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எம். ஜீவிதா 3 ஆம் இடமும் மாணவர்களுக்கான போட்டியில் பாடாலூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவன் எம். கலைவானன் முதலிடமும், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் எஸ். அஜித் 2 ஆம் இடமும், புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் இசாக் அமல்ராஜ் 3 ஆம் இடமும் பெற்றனர். மாணவிகளுக்கான இரட்டையர் போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுவாதி, எஸ். அம்பிகா முதலிடமும், பாடாலூர் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவிகள் யோகேஸ்வரி, அனிதா 2 ஆம் இடமும், தனலட்சுமி சீனிவாசன் பள்ளி மாணவிகள் ரேஷ்மா, தன்சிகா 3 ஆம் இடமும், மாணவர்களுக்கான போட்டியில் பாடாலூர் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எஸ். நவீன்குமார், எம். ராகுல் முதலிடமும், பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எஸ். அருண்குமார், முத்துக்குமார் 2 ஆம் இடமும், பெரம்பலூர் புனித ஜோசப் பள்ளி மாணவர்கள் டி. நிர்மல்ராஜ், எம். ராம்குமார் 3 ஆம் இடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காசோலை, சான்றிதழ்களை வழங்கினார் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்பிரமணியராஜா. தடகளப் பயிற்றுநர் க. கோகிலா, மாணவ, மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.