சுடச்சுட

    

    இயற்கை உரம் இடும் முறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும்

    By DIN  |   Published on : 01st January 2017 02:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மண் வளத்தை பாதுகாக்க இயற்கை உரம் இடும் முறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் வேளாண் அறிவியல் மைய முதுகலை விஞ்ஞானியும், தலைவருமான (பொ) ஜெ. கதிரவன்.
    பெரம்பலூரில் விவசாயம் மற்றும் மண்வள மேம்பாடு குறித்த தொழில்நுட்பங்களை நவீன தகவல் தொழில்நுட்ப மூலம் பரவலாக்கம் செய்தல் குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
    இன்றைய சூழ்நிலையில், விவசாயிகள் தேவைக்கு அதிகமான உரங்களையும், தரமில்லாத பூச்சி மற்றும் கொல்லி மருந்துகளை அறியாமல் பயன்படுத்துவதால், விவசாய நிலங்களிலும் மண்ணின் வளம் குன்றி வருகிறது. எனவே விவசாயிகள் இயற்கை உரம் இடும் முறைகளை படிப்படியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றார் கதிரவன். தொடர்ந்து, மண்வள மேம்பாடு குறித்து பல்வேறு தொழில்நுட்ப கருத்துகளை விளக்கி கூறினார் உழவியல் துறை வல்லுநர் புனிதவதி. ஓய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குநர் ராம்பிரசாத், கும்பகோணத்தில் இருந்து வீடியோ கான்பரஸ் முறையில் பெரம்பலூர் மாவட்ட கால்நடை வளர்ப்போர்களுக்கு இயற்கை விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கான முதலுதவி மற்றும் மூலிகை மருத்துவத்தை மேற்கொண்டு அதிகலாபம் பெறுவது குறித்து தொழில்நுட்ப உரையாற்றினார்.
    முன்னதாக, பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய பயிரான சின்ன வெங்காய சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய்தடுப்பு முறைகளை, நவீன தொலைதொடர்பு சாதனங்களை பயன்படுத்தி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாடாலூர் கிராம மக்களுடன் வல்லுநர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் இந்திராணி தலைமை வகித்தார். ரூபவேல் திட்டமேலாளர் புதுவாழ்வு திட்ட மேலாளர் ரூபவேல் முன்னிலை வகித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai