Enable Javscript for better performance
பூலாம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பூலாம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 01st January 2017 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
    பூலாம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பூலாம்பாடி பேரூராட்சி, உடும்பியம், பெரியம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக சென்று வருகின்றனர்.
    இந்நிலையில், இங்கு நிர்ணயிக்கப்பட்ட 5 மருத்துவர்களில், 4 பேர் வேறு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதேபோல, 2 செவிலியர்களும் பணியில் இல்லை. இதனால், பொது மக்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமித்து, பணியில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பூலாம்பாடி திருவள்ளுவர் உழவர் மன்றத் தலைவர் கு. வரதராசன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai