சுடச்சுட

    

    முதலமைச்சர் கோப்பை போட்டி: ரோவர் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 01st January 2017 02:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு போட்டிகளில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சிக் கல்லூரி மாணவர்கள் வற்றி பெற்றனர்.
    மாவட்ட அளவில் 2016- 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு உடல்திறன் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
    இதில், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கடற்கரைக் கைப்பந்து போட்டியில் 2ஆம் இடத்தையும், பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் 2 மற்றும் 3ஆம் இடங்களையும், ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் வென்றனர்.
    மாணவ, மாணவிகளுக்கான ஜுடோ போட்டிகளில் முதல் 2 இடங்களையும், பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் மாணவி பி பாரதி 3ஆம் இடத்தையும், நீச்சல் போட்டியில் மாணவர் என். தீபக் முதலிடத்தையும், எம். விஜயகுமார் 3ஆம் இடத்தையும், குழு கைப்பந்து போட்டியில் ரோவர் மாணவர்கள் 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.
    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சனிக்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கினார் ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கி. வரதராஜன்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai