சுடச்சுட

    

    வாரியத் தேர்வு: சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 01st January 2017 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அரசு வாரிய தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனர்.
    பெரம்பலூர் சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த அக்டோபர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு வாரிய தேர்வில், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவி டி. மீனா 700-க்கு 693 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை மாணவி கே. சுஷ்மிதா 691 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடமும், கட்டடவியல் துறை மாணவர் எஸ். வினோத்குமார் 690 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடமும் பெற்றனர்.
    இதேபோல, கட்டடவியல் துறை முதலாமாண்டு மாணவி எம்.கே. கீர்த்தனா மற்றும் இயந்திரவியல் துறை மாணவர் பி. செல்வின் 787 மதிப்பெண்கள் பெற்று கல்லூரி அளவில் முதலிடம் பெற்றனர். மேலும், 50 மாணவர்கள் செய்முறை பாடங்களில் 100- க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 920 மாணவர்கள் அரசு வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், உறுதுணையாக இருந்த பேராசிரியர்களையும் சனிக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai