Enable Javscript for better performance
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில்  கோயில்கள், தேவாலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில்  கோயில்கள், தேவாலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 02nd January 2017 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆங்கிலப் புத்தாண்டையொட்டி,பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள்,பிரார்த்தனைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
    சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில்,செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி கோயில்,பாடாலூர் வழிவிடு ஆஞ்சநேயர் கோயில்,வாலிகண்டபுரம் வாலீசுவரர் கோயில், பெரம்பலூர் பிரம்மபுரீசுவரர், மதனகோபால சுவாமி கோயில், எளம்பலூர் சாலையில் உள்ள முருகன் கோயில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜைகளும்,அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. மேலும்,ரஞ்சன்குடி கோட்டை,லாடபுரம் மயிலூற்று அருவி,அரும்பாவூர் எட்டெருமைபட்டி அருவி,விசுவக்குடி நீர்த்தேக்கம்,சாத்தனூர் கல்மரப்பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் காணப்பட்டனர்.
    தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை:  பெரம்பலூர் தூய பனிமய மாதா தேவாலயத்தில் வட்டார முதன்மை குரு அடைக்கலசாமி தலைமையில், உதவி பங்கு குரு மார்சலின் ஆகியோரது கூட்டுப்பாடல் திருப்பலி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்றது. இதேபோல,பாளையம் புனித சூசையப்பர் தேவாலயத்தில் பங்கு குரு சேவியர் தலைமையிலும், அன்னமங்கலம் கிராமத்தில் பங்கு குரு மரியதாஸ், நூத்தப்பூரில் பங்கு குரு தாவீது,தொண்டமாந்துறையில் பங்கு குரு அருண் பெல்லார்மின், பாத்திமாபுரத்தில் பங்கு குரு சந்தனம், எறையூரில் பங்கு குரு ஆரோக்கியசாமி, வடக்கலூரில் பங்கு குரு யூஜின் டோனி, பாடாலூரில் பங்கு குரு ஜோசப் ஆரோக்கியராஜ், திருவாளந்துறையில் பங்கு குரு ஜோசப்,திருமாந்துறையில் பங்கு குரு சகாய கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமையில் நள்ளிரவு திருப்பலியும்,சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் பங்கு குரு பிரடரிக் தலைமையிலும், பாரத ஸ்டேட் வங்கி அருகேயுள்ள டி.இ.எல்.சி தேவாலயத்தில் பங்கு குரு ஆஸ்நாத் ஜடா தலைமையிலும் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
    அரியலூரில்: அரியலூர் ஆலந்துறையார் கோயில், கைலாசநாதர் கோயில், காசிவிசுவநாதர் கோயில்,பாலசுப்பிரமணியர் கோயில்,ஒப்பில்லாதம்மன் கோயில்,திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில், திருமானூர் காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதர் கோயில்,செந்துறையில் ஜெயபுரீஸ்வரர் கோயில்,கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோயில்,விக்கிரமங்கலம் சோழீஸ்வரர் கோயில்,பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர்,கீழப்பழூர் ஆலந்துறையார்,உடையார்பாளையத்தில் பயறனீஸ்வரர்,ஜயங்கொண்டத்தில் கழுமலநாதர்,மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.
    தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி: அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியில் உள்ள புனித அடைக்கலமாதா அன்னை தேவாலயம்,தென்னூர் புனித லூர்து அன்னை தேவாலயம்,வரதராஜன்பேட்டை அடைக்கல அன்னை ஆலயம்,சின்ன அரண்மனை தெரு புனித லூர்து அன்னை தேவாலயம்,சி.எஸ்.ஐ. தேவாலயம்,பெந்தகோஸ்தே சபை உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு திருப்பலிகள்,வழிபாடுகள் நடைபெற்றன. புத்தாண்டு சிறப்பு உரையை அந்தந்த தேவாலயங்களின் பங்குத் தந்தைகள் வழங்கினர். புத்தாடை அணிந்து இனிப்புகளை வழங்கி பரஸ்பரம் வாழ்த்துகளை கிறிஸ்தவர்கள் பரிமாறிக் கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai