சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இளைஞர் உள்பட 2 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட நாட்டார்மங்கலம் கிராமம், கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன் (25). இவரது நண்பர்களான அதேபகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் மோகன் (29), ரஞ்சித் குமார் உள்பட 4 பேர் ஆலத்தூர் பகுதியில், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, சனிக்கிழமை இரவு கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர், நாட்டார் மங்கலம் கிராமத்துக்கு 2 மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர். கூத்தனூர் பிரிவுசாலை அருகே சென்றபோது, வெங்கடேசன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தனர். இதில், பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பாடாலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்த மோகனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ரஞ்சித்குமார் அளித்த புகாரின்பேரில் பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சிகிச்சை பெற்றுவந்த கூலித்தொழிலாளி சாவு:    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள காடூர் கிராமம், காலனி தெருவைச் சேர்ந்தவர் கலியன் மகன் கலையரசன் (44). கூலித்தொழிலாளி. கலையரசனுக்கும், அவரது மனைவி தெய்வமணிக்கும் கடந்த 27 ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த கலையரசன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையறிந்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கலையரசன் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai