சுடச்சுட

    

    மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: தனலட்சுமி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 02nd January 2017 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட அளவில் 17 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
    பெரம்பலூர் சீனிவாசன் கல்விக் குழுமம், தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவில் 17 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 25 முதல் 30 ஆம் தேதி வரை நடத்தின. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 22 பள்ளிகளைச் சேர்ந்த 17 வயதுக்குள்பட்ட மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர். நாக் அவுட் முறையிலான இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில், தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி அணி, செயின்ட் ஜோசப் மேட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி ஆகியவை மோதின. இதில்,தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி அணியினர் சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.
    தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சாம்பியன் பட்டம் பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கி பாராட்டினார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன்.
    இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 மாணவன் முத்துவுக்கும்,தொடர் ஆட்ட நாயகன் விருது செயின்ட் ஜோசப் மேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவன் ஜீனோவுக்கும் வழங்கப்பட்டது. விழாவில்,ஊர்க்காவல் படை மண்டல தளபதி ஜெ.அரவிந்தன், பள்ளி முதல்வர் ஆர். கோவிந்தசாமி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் முதல்வர்கள், துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் கிரிக்கெட் சங்க செயலர் பழனிசாமி நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai