சுடச்சுட

  

  பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 2.96 லட்சத்திலான உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
  மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்குத் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒருவருக்கு ரூ. 6,900 மதிப்பில் மூன்றுச்சக்கர வண்டி,
  8 பேருக்கு தலா ரூ. 6,900 மதிப்பில் சக்கர நாற்காலிகள், 20 பேருக்கு தலா ரூ. 1,026 மதிப்பில் நடைப்பயிற்சி சாதனங்கள், 13 பேருக்கு தலா ரூ. 5,550 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகள், ரூ. 7,080 செவித்துணைக் கருவிகள், 4 பேருக்கு தலா ரூ. 4,500 மதிப்பிலான கற்றல் கற்பித்தல் உபகரண பெட்டிகளை வழங்கினார்.
  இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்கக் கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அளிக்கப்பட்ட 274 மனுக்கள் பெறப்*பட்டன.  மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) மு. துரை, முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி, அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai