சுடச்சுட

  

  பெரம்பலூரில் அதிகாரிக்கு கொலை மிரட்டல் : ஆசிரியர் "சஸ்பெண்ட்

  By DIN  |   Published on : 03rd January 2017 07:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
  பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலம் அரசு ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் தயாநிதி (40), ஆலத்தூர் வட்டம், கீழமாத்தூர் அருகேயுள்ள மங்களம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்.  தயாநிதி பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுத்தல், பணியின்போது வெளியே செல்லுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் சென்றதாம். இதன்பேரில் விசாரித்து அறிக்கை அளிக்கக் கோரி கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது.
  அதனடிப்படையில், கடந்த 21 ஆம் தேதி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் இரா. எலிசபெத் அப்பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, ஆசிரியர் தயாநிதியை விசாரணைக்காக வருமாறு உத்தரவிட்டார்.
  இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் தயாநிதி, மது போதையில் பெரம்பலூரில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்துக்குச் சென்று, அங்கு பணியில் இருந்த கண்காணிப்பாளர் ஞானசங்கர் மற்றும் அலுவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, வெளியே சென்றிருந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எலிசபெத் ஆகியோரைத் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
  இதையடுத்து அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் க. நந்தகுமார் உத்தரவிட்டதன்பேரில், ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எலிசபெத் அண்மையில் உத்தரவிட்டார். பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai