Enable Javscript for better performance
மனு அளிக்க அனுமதி மறுப்பு : போலீஸாருடன் வாக்குவாதம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, திங்கள்கிழமை மனு அளிக்க வந்தவர்களைத் போலீஸார் தடுத்தி நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம், அரசலூர், பூலாம்பாடி, கடம்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுமை ஆட்டோவில் காளைகளுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
    இதையறிந்த அரும்பாவூர் போலீஸார், பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள அரசலூர் பிரிவு சாலையில், அவர்களை வழிமறித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாகனங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை இறக்கிய இளைஞர்கள் எசனை காட்டு மாரியம்மன் கோயில் வரை காளைகளை ஓட்டி வந்தனர். பின்னர், போலீஸார் அனுமதித்ததைத் தொடர்ந்து 2 வாகனங்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
    ஆனால், ஆட்சியரகம் எதிரே இருந்த போலீஸார், அவர்களை வழிமறித்து காளைகளுடன் செல்ல எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், காளைகளுடன் மனு அளிக்கச் சென்ற இளைஞர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, இளைஞர்கள் மட்டும் சென்று மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமாரிடம் அளித்த மனு:
    பெரம்பலூர் மாவட்டத்தில் அன்னமங்கலம், டி.களத்தூர், பூலாம்பாடி, கள்ளப்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்து வந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
    எனவே ஜல்லிக்கட்டை நடத்த, தமிழக அரசிடம் அனுமதி பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai