சுடச்சுட

    

    மாநில அளவிலான கைப்பந்துப் போட்டிகளில் வென்ற விளையாட்டு விடுதி மாணவிகளுக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 03rd January 2017 07:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில கைப்பந்துப் போட்டிகளில் வெள்ளி வென்ற பெரம்பலூர் விளையாட்டு விடுதி வீராங்கனைகளை திங்கள்கிழமை பாராட்டினார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார்.
    நிகழாண்டில் தடகள விளையாட்டுக்கு 16 மாணவிகள், கைப்பந்துக்கு 23 மாணவிகள், டேக்குவாண்டோவுக்கு 11 மாணவிகள் என மொத்தம் 50 மாணவிகள் பெரம்பலூர் உண்டு, உறைவிடத்துடன் கூடிய விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
    விடுதி தொடங்கப்பட்ட கடந்த 4 ஆண்டுகளில் தடகளத்தில் தேசியளவிலான போட்டிகளில் 3 பேர் தங்கம் மற்றும் வெள்ளி, மாநில அளவில் 18 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.கைப்பந்துப் போட்டியில், இதுவரை 23 மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் தேசியளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். மாநில அளவில் இதுவரை ஒரு தங்கப் பதக்கமும், 2 வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கலமும் வென்றுள்ளனர்.   
    இந்நிலையில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் கடந்த 27 முதல் 30 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட மாநில அளவிலான பாரதியார் தின கைப்பந்துப் போட்டிகளில் 19 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்ட அணியினர் வெள்ளி வென்றனர். இவர்களை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்தினார் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்பிரமணியராஜா, கைப்பந்து பயிற்றுநர் இரா. வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai