எஸ்எஸ்எல்சி தேர்வில் சிறப்பிடம்: மாணவிக்கு ரூ. 4 ஆயிரத்துக்கான காசோலை
By DIN | Published on : 04th January 2017 08:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பாடவாரியாக அதிக மதிப்பெண் பெற்ற பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஹேமலதாவிற்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ. 4 ஆயிரத்திற்கான காசோலையையும், பாராட்டுச் சான்றிதழையும் திங்கள்கிழமை வழங்கினார் ஆட்சியர் க. நந்தகுமார்.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி த. ஹேமலதா, ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட 4 பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
அதைத்தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூ. 1,000 வீதம் 4 பாடங்களுக்கும் சேர்த்து ரூ. 4 ஆயிரத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழையும் திங்கள்கிழமை வழங்கினார் ஆட்சியர் க. நந்தகுமார்.
இந்நிகழ்ச்சியின்போது, முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூர்த்தி, மாவட்ட கல்வி அலுவலர் (பொ) சுகுமார், மாணவியின் பெற்றோர் தங்கபாண்டியன், ரதி தங்கபாண்டியன், ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர் டி. கோமதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.