சுடச்சுட

  

  நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

  By DIN  |   Published on : 04th January 2017 05:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sugarcane

   

  பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு, நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி ஆலை வளாகத்திற்குள் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
  கரும்பு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஏ.கே. ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த காத்திருப்பு போராட்டத்தில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ. 20.49 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் விலை அறிவிக்க வேண்டும். பெரம்பலூர் சர்க்கலை ஆலையில் 18 மெகா வாட் மின்சாம் உள்ளிட்ட திட்டங்களை துரிதப்படுத்தி, நிகழாண்டு கரும்பு அரைவை பருவத்திற்கு கரும்பு அரைவை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து, நெல் ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரமும், கரும்புக்கு ரூ. 50 ஆயிரமும், இதர பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரமும் இழப்பீடு வழங்கவேண்டும். பாடாலூரில் அமைக்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும். மேலும், பால் பவுடர் தொழிற்சாலை அமைத்து பால் பவுடர் தயாரிக்கும் பணி தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  
  இதில், மாவட்ட செயலர் அன்பழகன், பங்குதாரர்கள் சங்கம் மற்றும் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் கருப்புடையார், துரைசாமி, ஜானகிராமன், ஞானசேகரன், மாணிக்கம், மாவட்ட பொருளாளர் காமராஜ் உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai