சுடச்சுட

    

    "பணமில்லா பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வு அவசியம்'

    By DIN  |   Published on : 04th January 2017 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணமில்லா பரிவர்த்தனை தொடர்பாக அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றார் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ப. அருள்தாசன்.
    பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ள பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுட்டுள்ளது.  இந்தக் குழுவில் வளர்ச்சித் துறை, மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வு திட்ட அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மக்களிடம் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இதன் அடிப்படையில் குழுவினருக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
    இந்தப் பயிற்சி வகுப்பை தொடக்கி வைத்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மேலும் பேசியது: இனிவரும் காலங்களில் பணமில்லா பரிவர்த்தனை என்பது மக்களின் இன்றியமையாத ஒன்றாக விளங்கும். நாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் பணத்தை எடுத்துச் செல்லும் நிலை பணமில்லா பரிவர்த்தனையால் முற்றிலும் மாற்றமடையும்.இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறோம்.     எனவே, செல்போன் மூலமாகவே நமது பணமில்லா பரிவர்த்தனைகளை சாத்தியப்படுத்தும் வகையில் செயலிகள் (அப்ளிகேஷன்கள்) வடிவமைக்கப்பட்டுள்ளன.
    இ- பேங்கிங், மொபைல் பேங்கிக் சேவைகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பணமில்லா பரிவர்த்தனையை அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அரசு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள அனைத்து அலுவலர்களுக்கும், பாரத பிரதமரின் கனவான பணமில்லா பரிவர்த்தனை என்ற இலக்கை அடைவதற்காக, பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், அதனால் பொதுமக்களுக்கும், நாட்டுக்கும் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் விளக்கி கூற வேண்டும்.  மேலும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள், ஓய்வூதியம் பெறும் முதியோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பணமில்லா பரிவர்த்தனை குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் வங்கிக்கு சென்று, வங்கி சேவைகளை மேற்கொள்வதற்கு பதிலாக இருக்கும் இடத்திலிருந்தே பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கான வழிமுறைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்றார் அருள்தாசன்.    பயிற்சி முகாமில், புதுவாழ்வுத் திட்ட மாவட்ட மேலாளர் ரூபவேல், உதவித் திட்ட அலுவலர் கல்யாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai