சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு தேசிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தேர்வு போட்டிகள் வரும் 6, 7 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட விளையாட்டு அலுவலர் ம. ராமசுப்பிரமணிய ராஜா.
    ஜன. 6 ஆம் தேதி தடகளம், கையுந்துப்பந்து, பூப்பந்து, மேஜைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேர்வுப் போட்டிகளான ஹாக்கி, வில்வித்தை, ஜுடோ, சைக்கிள் ஓட்டுதல், கூடைப்பந்து ஆகிய போட்டிகளும், 7 ஆம் தேதி டேக்வாண்டோ, பளு தூக்குதல், குத்துச்சண்டை, டென்னிஸ், ஆகிய விளையாட்டுப் போட்டிகளும், தேர்வுப் போட்டிகளான கால்பந்து, கோ -கோ, கைப்பந்து, மல்யுத்தம்,  ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய போட்டிகளும் நடைபெற உள்ளது. 14 மற்றும் 17 வயதிற்குள்பட்ட ஆண்கள், பெண்களுக்கு 100 மீ, 400 மீ, ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் 4ல100 மீ தொடர் ஓட்டம் ஆகிய தடகளப் போட்டிகளும், 50 மீ. ப்ரீ ஸ்டைல், 50 மீ. பேக் ஸ்ட்ரோக், 50 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக், 50 மீ பட்டர்பிளை, 4ல50 மீ ப்ரீ ஸ்டைல் ரிலே ஆகிய நீச்சல் போட்டிகள் நடைபெறும்.
    மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். இதில் பங்கேற்கும் 14 வயதுக்குள்பட்டோர் 1.1.2003 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாகவும், 17 வயதுக்குள்பட்டோர் 1.1.2000 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். போட்டிகளில் பங்கேற்போர் பிறப்புச் சான்று மற்றும் அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு உணவுப்படி மற்றும் பயணப்படி வழங்கப்படும். தேர்வுப் போட்டிகளில் வெற்றி பெறுவோரில் ஒரு பிரிவில், இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள். தேர்வுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு உணவுப்படி மற்றும் பயணப்படி வழங்கப்பட மாட்டாது என மாவட்ட விளையாட்டு அலுவலர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai