சுடச்சுட

    

    பேருந்து ஓட்டுநரை தாக்க முயன்ற ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கைது

    By DIN  |   Published on : 04th January 2017 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்க முயன்ற சென்னையை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 4 பேரை பாடாலூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    சென்னை ஏ.சி கார்டன் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வேனில் சென்றுகொண்டிருந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகேயுள்ள கொண்டக்காரன் பாலம் அருகே செவ்வாய்க்கிழமை சென்றபோது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி
    சென்ற அரசுப் பேருந்து ஒன்று அந்த வேனின் அருகே சென்றதாம். இதையறிந்த, அந்த வேனில் இருந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் பேருந்து ஓட்டுநர் சத்தியமூர்த்தியிடம் (38) வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயற்சித்தனராம். இதுகுறித்து சத்தியமூர்த்தி அளித்த புகாரின்பேரில் பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, வேனில் பயணித்த பக்தர்கள் ராஜா (25), பார்த்திபன் (28), சுகுமார் (30), மகேஷ் (31) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.             

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai