சுடச்சுட

    

    பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை (ஜன.5) வெளியிடப்பட உள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் வாக்காளர் பதிவு அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான இரா. பேபி.  
    பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி 1.9.2016 முதல் 30.9.2016 வரை நடைபெற்றது. 1.1.2017 ஆம் தேதியை தகுதியான நாளாகக்கொண்டு, 18 வயது பூர்த்தியான வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பெயர், முகவரி ஆகிய திருத்தங்களை மேற்கொள்ளவும், பெயர் நீக்கம் செய்யவும் 11.9.2016 மற்றும் 25.9.2016 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில் பெறப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனைக்குப் பின்னர், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வெளியிடப்பட உள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai