சுடச்சுட

    

    பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கான திறனறித் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது.  
    சிறந்த இளையோர் திறனறித் தேர்வு வினாத்தாள்களை மாணவர்களுக்கு வழங்கி தேர்வை தொடக்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி பேசியது: மாணவர்கள் தன்னலம் கருதாமல் சேவை புரிய வேண்டும். மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, கைமாறு கருதாது ஒருவருக்கொருவர் சகிப்புத் தன்மையோடு புரிந்துணர்வு கொண்டு விட்டுக்கொடுத்து தன்னால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும். மேலும்,பள்ளிகளில் மரம் நடுதல்,அவற்றை பேணிக்காத்தல்,சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு, இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் சிறந்தவர்கள் என அனைவராலும் போற்றப்பட பாடுபாட வேண்டும் என்றார் அவர்.  
    தொடர்ந்து,மாவட்ட கன்வீனர் வி. ராதாகிருஷ்ணன் செயல்திட்டம், தேர்வின் நிலை, தேர்வு முறை, சான்றிதழ்கள் ஆகியவற்றை விளக்கிக் கூறினார்.
    இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 75 அரசு மற்றும் தனியார் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை பள்ளிகளைச் சேர்ந்த 150 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். மாவட்டக் கல்வி அலுவலர் சுகுமாரன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் இரா. எலிசபெத், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரெ. சுந்தரராஜு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செ. கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இணை கன்வீனர் மு. கார்த்திகேயன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் எம். கருணாகரன் நன்றி கூறினார்.              

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai