சுடச்சுட

    

    பணமில்லா பரிவர்த்தனை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியர்

    By DIN  |   Published on : 05th January 2017 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணமில்லா பரிவர்த்தனை குறித்த விழிப்புணர்வை அடித்தட்டு மக்களிடமும், சிறு வியாபாரிகளிடமும் ஏற்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.
    மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பணமில்லா பரிவர்த்தனை திட்டம் குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்ற ஆட்சியர் மேலும் பேசியது:   
    பணமில்லா பரிவர்த்தனை,அதன் நோக்கம்,பயன்கள் குறித்து அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு உள்ளது. புதுவாழ்வுத் திட்டம், மகளிர் திட்ட அலுவலர்கள், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் ஆகியோர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடமும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவோரிடமும் அலுவலர்கள் விளக்கிக்கூற வேண்டும். மேலும், கிராமப்பகுதிகளில் சிறு வியாபாரிகளிடம் பணமில்லா பரிவர்த்தனை செயலிகளைப் பயன்படுத்தும் முறையையும் தெளிவாக எடுத்துரைத்து, அவர்களுக்கு பணமில்லாப் பரிவர்த்தனை செய்யும் ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும். ஆதார் எண்ணைக்கொண்டு, இந்த பணமில்லா பரிவர்த்தனையை எளிதில் கையாளலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் பணமில்லா பரிவர்த்தனையின் பயன்பாடு குறித்த புரிதல்,விழிப்புணர்வையும் அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்படுத்த அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் நந்தகுமார்.
    இதில்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர். சிவராமன்,முன்னோடி வங்கி மேலாளர் ப. அருள்தாசன், ஊரக வளர்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலர் கல்யாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai