சுடச்சுட

    

    பெரம்பலூரில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை மற்றும் ரூ. 7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்ற மர்மநபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர் 4 சாலை செல்லும் சாலையில் உள்ள ராஜா நகரைச் சேர்ந்தவர் அஜீஸ். இவர், வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நஜீரா பேகம் (32). இவர், கடலூர் மாவட்டம், ஆவட்டி அருகே உள்ள கொடையூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரும், அவரது மாமியாரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில், புதன்கிழமை காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது 12 பவுன் நகை மற்றும் ரூ. 7 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai