Enable Javscript for better performance
அரியலூர் அருகே சுமை ஆட்டோ மோதி ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர்: அரியலூர் மாவட்டம், தளவாய் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் சுமை ஆட்டோ மோதி உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
    ஈச்சங்காடு அருகேயுள்ள சிலப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் விருத்தகிரி (40). அதே ஊரைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். வியாழக்கிழமை மாலை இருவரும் ஈச்சங்காட்டில் இருந்து தங்களது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.தளவாய் காவல் நிலையம் அருகே இவர்களது வாகனமும், எதிரே வந்த சுமை ஆட்டோவும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விருத்தகிரி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தளவாய் போலீஸார் சடலத்தை மீட்டு  அரசு மருத்துவமனைக்கும், கலைச்செல்வனை விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai