சுடச்சுட

  

  பெரம்பலூர்: பெரம்பலூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் மூலம் அளிக்கப்படும் இலவசத் தையல் கலை பயிற்சியில் பங்கேற்பதற்கான நேர்முகத் தேர்வு வெள்ளிக்கிழமை (ஜன. 6) நடைபெற உள்ளது.
  18 முதல் 40 வயதுடைய குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு படித்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக, சுயதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும். தொடர்ந்து 21 நாள்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில், அனைத்துவித தையல் கலைகளுக்கும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை பயிற்சியளிக்கப்படும். பயிற்சி காலத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அளிக்கப்படும்.
  பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு நேர்முக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  மேலும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச்சான்றிதழின் நகல், 4 பாஸ்போர்ட் அளவு மற்றும் 1 ஸ்டாம்ப் அளவு புகைப்படங்களை விண்ணப்பத்துடன் இணைக்கவும். நேர்முக தேர்வு, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே பயிற்சிக்கு அனுமதி கிடைக்கும்.பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரும் (பொ), மாவட்ட முன்னோடி வங்கி மேலாளருமான பா. அருள்தாசன் இத்தகவலைத் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai