சுடச்சுட

    

    பெரம்பலூர்: விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசுப் பேருந்து, பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகஸ்டியன் மகள் மகிமாசெர்லின் (3). கடந்த 21.11.2012-ல் மணப்பாறை ஆசாத் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் உறவினருடன், பேருந்துக்காகக் காத்திருந்தபோது, அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
    இதனிடையே, விபத்து நஷ்டஈடு வழங்கக்கோரி அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அகஸ்டியன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென கும்பகோணம் கோட்டத்திற்குள்பட்ட திருச்சி அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு கடந்த 28.10.2014-ல் உத்தரவிட்டார்.
    இத்தொகையை போக்குவரத்து கழகம் வழங்காததால் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 9.4.2015-ல் அகஸ்டின் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.
    இதன்மீது விசாரணை மேற்கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நஷிமா பானு, வட்டியுடன் சேர்த்து ரூ. 5.86 லட்சம் வழங்கவும், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய வேண்டுமெனவும் அண்மையில் உத்தரவிட்டார்.
    அதன்படி, சென்னையிலிருந்து மணப்பாறை நோக்கி சென்ற அரசுப் பேருந்தை, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையத்தில் நீதிமன்ற ஊழியர்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai