Enable Javscript for better performance
கரும்பு விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் தாற்காலிக ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கரும்பு விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் தாற்காலிக ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 06th January 2017 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர்: பெரம்பலூர் எறையூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, அந்த ஆலை முன் கடந்த 3 ஆம் தேதி முதல் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் தாற்காலிகமாக வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.   
         தொடர்ந்து, 3- வது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற கரும்பு விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரமுகர்கள், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆலை வளாகத்தில் உள்ள அலுவலகம் எதிரே அரை நிர்வாணத்தில் படுத்துறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதனிடையே, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலர் பி. சண்முகம் ஆகியோருடன், தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத், சர்க்கரைத்துறை ஆணையர் மகேசன் காசிராஜன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், ஜன. 10-க்குள் நிலுவைத் தொகை அனைத்தும் வழங்கப்படும் என ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இதையடுத்து தொடர் காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai