சுடச்சுட

    

    பெரம்பலூர்: வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராகாத பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து வியாழக்கிழமை உத்தரவிட்டார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நஷிமாபானு.
    பெரம்பலூர் அருகேயுள்ள பாப்பாங்கரை கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பிள்ளை மகன் சதீஷ்குமார் கடந்த 23.10.2013-ல் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது.
    இதனிடையே, சதீஷ்குமாரின் பெற்றோர் செல்லப்பிள்ளை, சரோஜா ஆகியோர் விபத்து இழப்பீடு கோரி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் சாட்சி சொல்ல புலன் விசாரணை அதிகாரியான பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் நீதிமன்றத்தின் மூலம் வியாழக்கிழமை (ஜன. 5) ஆஜராக வேண்டுமென அழைப்பாணை அனுப்பப்பட்டும், அவர் ஆஜராகவில்லை.
    இதையடுத்து, ஜன. 12 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென ஆய்வாளர் ராஜ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து வியாழக்கிழமை உத்தரவிட்டார் நீதிபதி.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai