சுடச்சுட

  

  தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனிவாசன் கல்லூரி சிறப்பிடம்

  By DIN  |   Published on : 06th January 2017 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரம்பலூர்: தேசியளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
  தில்லி, ஹைதராபாத்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரியில் பயிலும் இளம் அறிவியல் 3 ஆம் ஆண்டு உணவக மேலாண்மைத் துறை மாணவர் மு. அருண்குமார், அகில இந்திய அளவில் பிகாரில் 18 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று நடைபெற்ற சிலம்பப் போட்டியில் முதலிடம் பெற்றார்.  இதே கல்லூரியில் பயிலும், இளம் அறிவியல் 2 ஆம் ஆண்டு கணிதத்துறை மாணவர் க. பிரகாஷ், முதுநிலை முதலாமாண்டு கணிதத்துறை மாணவர் த. மணிகண்டன் ஆகியோர் தேசியளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றனர்.
  முதுநிலை 2 ஆம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி லி. கத்திஜாபேகம், இளம் அறிவியல் 3 ஆம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி ம. பார்கவி ஆகியோர் மாவட்ட அளவிலான கடற்கரை வாலிபால் போட்டியில் தங்கம் வென்று, தேசியப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இளங்கலை 3 ஆம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் ந. நந்தகுமார் மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வோன்டோ போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று, தேசியளவில் நடைபெற்ற டேக்வோன்டோ போட்டியில் சிறப்பிடம் பெற்றார். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை பாராட்டிப் பரிசளித்தார் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன். கல்லூரி முதல்வர் முனைவர் நா. வெற்றிவேலன், துணை முதல்வர் பேராசிரியர் கோ. ரவி, கல்லூரிப் பேராசிரியர்கள், உடற்கல்வித் துறை பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai