சுடச்சுட

    

    பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 30 ஆம் நாள் நினைவு தினத்தையொட்டி, அமைதிப் பேரணி, மலரஞ்சலி நிகழ்ச்சி பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, பாலக்கரை வழியாகச் சென்று புறநகர்ப் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை எதிரே முடிந்தது.
    அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவர் அ. அருணாசலம் ஆகியோர் முன்னிலையில், கட்சியின் மாவட்டச் செயலர் ஆர்.டி. ராமச்சந்திரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு உறுதிமொழியேற்கப்பட்டது.
    நிகழ்ச்சியில் நகரச் செயலர் ஆர். ராஜபூபதி, ஒன்றியச் செயலர்கள் என்.கே. கர்ணன், ப. கிருஷ்ணசாமி, சிவபிரசாகம், சுரேஷ், முன்னாள் நகர்மன்றத் தலைவர்கள் சி. ரமேஷ், எம்.என். ராஜா, மாவட்ட நிர்வாகிகள் பூவை த. செழியன், ராணி, என். சேகர், மாவட்ட அணிச் செயலர்கள் எம்.என். ராஜாராம், வழக்குரைஞர் குலோத்துங்கன், கார்த்திகேயன், செல்வக்குமார், கா. சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai