Enable Javscript for better performance
பெரம்பலூர், குன்னம் பேரவை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 5.39 லட்சம் பேர்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர், குன்னம் பேரவை தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 5.39 லட்சம் பேர்

    By DIN  |   Published on : 06th January 2017 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர்: பெரம்பலூர், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,65,770 ஆண்கள், 2,73,720 பெண்கள், 25 இதரர் என மொத்தம் 5,39,515 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் வருவாய்க் கோட்டாட்சியர் இரா. பேபி.
    பெரம்பலூர் கோட்டாட்சியரகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்ட வருவாய்க் கோட்டாட்சியர் மேலும் கூறியது:
    1.9.2016 ஆம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 2,75,489, குன்னம் தொகுதியில் 2,53,520 என மொத்தம் 5,29,009 வாக்காளர்கள் இருந்த நிலையில் இரு தொகுகளுக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 10,884 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். மேலும் இறப்பு, இரட்டைப் பதிவு, இடப்பெயர்ச்சியால் பெரம்பலூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 136 ஆண்கள், 128 பெண்கள் என 264 வாக்காளர்களும், குன்னம் தொகுதியில் 56 ஆண்கள், 58 பெண்கள் என 114 வாக்காளர்களும் நீக்கப்பட்டனர்.தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி பெரம்பலூர் தொகுதியில் உள்ள 322 வாக்குச் சாவடிகளில் 1,37,297 ஆண்கள், 1,43,762 பெண்கள், 14 இதரர் என மொத்தம் 2,81,073 வாக்காளர்கள் உள்ளனர். குன்னம் தொகுதியில் உள்ள 316 வாக்குச்சாவடிகளில் 1,28,473 ஆண்கள், 1,29,958 பெண்கள், 11 இதரர் என மொத்தம் 2,58,442 வாக்காளர்கள் உள்ளனர்.
    ஆக, இரு தொகுதிகளிலும் 2,65,770 ஆண்கள், 2,73,720 பெண்கள், 25 இதரர் என மொத்தம் 5,39,515 வாக்காளர்கள் உள்ளனர் என்றார் வருவாய்க் கோட்டாட்சியர்.
    வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன் (பெரம்பலூர்), தமிழரசன் (குன்னம்), சீனிவாசன் (ஆலத்தூர்), மனோன்மணி (வேப்பந்தட்டை) உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai