சுடச்சுட

    

    பெரம்பலூர்: ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, மக்களை சிரமத்திற்குள்ளாக்கிய மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் காங்கிரஸார் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
    மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் டி. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் கிருஷ்ணன், சுந்தராஜூ, மாவட்டப் பொருளாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநில துணைத் தலைவர் சுஜாதா பேசியது:  
    மத்திய அரசின் அறிவிப்பால், அடித்தட்டு மக்கள் சில்லறைத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுகின்றனர். சிறு, குறு வியாபாரிகள் போதிய வருவாயின்றி வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர். இன்றுவரை வங்கிகளில் அதிக கூட்டம் காணப்படுகிறது. ஏ.டி.எம்-களில் காலை முதல் நீண்டவரிசையில் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் சில்லரைத் தட்டுப்பாடு நீங்கிவிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அதற்கு 6 மாதங்களாகும் என்றார் அவர். வட்டாரத் தலைவர்கள் கண்ணன், செல்வம், சின்ராஜ், ரெங்கராஜ், செல்வக்குமார், அருணாசலம், காமராஜ், தங்கவேல், மாவட்ட நிர்வாகிகள் ரத்தினசாமி, திருவண்ணாமலை, காமராஜ், அருண்பிரசாத், சிவாஜி மூக்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai